தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குப் புத்தக மொழிபெயர்ப்புச் சேவைகள்
ProofreadingServices.com கதை மற்றும் கதையல்லாத புத்தகங்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கிறது, இதன்மூலம், ஆசிரியர்கள் புதிய வாசகர்களைச் சென்றடையவும், கூடுதல் நூல்களை விற்கவும் உதவுகிறது. எங்கள் தொழில்முறை மொழிபெயர்ப்புச் சேவைகள் 100% மனிதர்களை அடிப்படையாகக் கொண்டவை, இவை எப்போதும் தானியங்கியாகச் செய்யப்படுவதில்லை, உங்களுடைய ஆசிரியர் குரல் மற்றும் பாணியைப் பாதுகாத்தபடி துல்லியமான மொழிபெயர்ப்புகளை வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
ஓர் இலக்கிய மொழிபெயர்ப்பு விலைகூறலுக்கு, எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் புத்தகத்தை ஏன் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கவேண்டும்?
நீங்கள் பல மாதங்கள் அல்லது சில வருடங்களைச் செலவிட்டு உங்கள் புத்தகத்தை எழுதியுள்ளீர்கள், அதைத் தமிழில்மட்டும் பதிப்பித்து அதன் தாக்கத்தை ஏன் கட்டுப்படுத்தவேண்டும்? தமிழ் படிக்கத் தெரியாத பல கோடி மக்களைச் சென்றடைவதற்கான மிகச்சிறந்த வழி, உங்கள் படைப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல். தொழில்முறை ஆங்கில மொழிபெயர்ப்பின்மூலம், உங்களுடைய வாசகர் எண்ணிக்கையும் பெருகும், உங்கள் விற்பனையும் பெருகும்.
நாங்கள் வழங்கும் புத்தக மொழிபெயர்ப்புச் சேவைகள் என்னென்ன?
நாங்கள் தமிழிலிருந்து US அல்லது UK ஆங்கில மொழிபெயர்ப்புகளை வழங்குகிறோம், இவற்றை எங்கள் ஆங்கிலக் குழுவினர் தனியாக மெய்ப்பு திருத்துகிறார்கள். மற்ற சேவை வழங்குநர்கள் உங்கள் நூலை மொழிபெயர்ப்பதைமட்டுமே செய்வார்கள், நாங்கள் வரிகளை மொழிபெயர்ப்பதுடன், அவற்றை ஓர் ஆங்கில வல்லுனருக்கு அனுப்புகிற பணியையும் செய்கிறோம், அவர் சரியில்லாத சொற்றொடர் அமைப்புகளைச் சரிசெய்வார், தொடரும் பிழைகளைக் கண்டுபிடிப்பார். இதற்குக் காரணம், ProofreadingServices.com ஒரு மெய்ப்பு திருத்துகிற மற்றும் எடிட்டிங் சேவையாகத் தொடங்கியது, எங்கள் குழுவில் உலகின் மிகச்சிறந்த ஆங்கில எடிட்டர்களில் சிலர் உள்ளார்கள்.
நாங்கள் எந்தவிதமான எழுத்துப்பிரதிகளை மொழிபெயர்க்கிறோம்?
நாங்கள் உலகெங்குமுள்ள ஆசிரியர்களுக்காகப் புதினங்கள், கதையல்லாத படைப்புகள், சிறுவர் நூல்கள் மற்றும் பலவற்றை மொழிபெயர்க்கிறோம். எங்கள் சிறப்புப்பணிகள்...
- இலக்கிய நூல்கள், எடுத்துக்காட்டாக, அறிவியல் புனைகதைப் புதினங்கள், மர்மக் கதைகள், காதல் புதினங்கள் மற்றும் வரலாற்றுக் கதைகள்
- கல்வியியல் நூல்கள், எடுத்துக்காட்டாக, தத்துவம், வரலாறு, அறிவியல் மற்றும் பிற தலைப்புகளைப்பற்றிய எழுத்துப்பிரதிகள்
- தொழில் சார்ந்த நூல்கள், எடுத்துக்காட்டாக, செயல்திறன், சிந்தனைத் தலைமை நூல்கள் மற்றும் பலவற்றைப்பற்றிய மின்னூல்கள்
நாங்கள் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுடன் பணியாற்றியுள்ளோம், இவர்களுடைய புத்தகங்கள் பல வகைகள், தலைப்புகளுக்கு நீள்கின்றன: இளம் வயதுவந்தோர் கதைகளில் தொடங்கித் தன்வரலாறுகள், சமையல் நூல்கள், அரசியல் வரலாறு, தொழில்நுட்பம் மற்றும் கலையைப் பற்றிய கதையல்லாத படைப்புகள்வரை. சுருக்கமாகச் சொன்னால், எங்களுடைய பல ஆண்டு அனுபவமும், எங்களுடைய மொழி வல்லுனர்களுடைய பரந்த வலைப்பின்னலும் ஒன்றாகச் சேர்ந்துள்ளதால், அநேகமாக எந்த மொழியிலும் எந்தத் தலைப்பிலும் எழுதப்பட்ட நூல்களையெல்லாம் எங்களால் மொழிபெயர்க்க மற்றும் மெய்ப்பு திருத்த இயலுகிறது.
உங்கள் புத்தகத்துக்கு எங்கள் தமிழ் மொழிபெயர்ப்புச் சேவைகளை ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும்?
ProofreadingServices.com ல் நாங்கள் நூல்களை இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழங்குகிறோம், பொதுவான மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழங்குவதில்லை. ஒரு திறமை மிக்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர் நேரடியான சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பைத் தாண்டிச் செல்வார், உங்கள் வகையின் மரபுகளைக் கவனிப்பார், உங்கள் குரல் மற்றும் எழுதும் பாணியின் நுட்பங்களைப் பாதுகாப்பார்.
உலகெங்குமுள்ள ஆசிரியர்களை மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் ஆங்கில மெய்ப்பு திருத்துபவர்களுடன் இணைப்பதை எளிதாக்கும் நோக்கத்துடன் நாங்கள் செயல்படுகிறோம். நீங்கள் சென்னை, கோயம்பத்தூர், மதுரை அல்லது வேறு எந்த ஊரில் வசித்தாலும் சரி, உங்களுடைய புத்தகத்தை மேலும் கூடுதலான வாசகர்கள் வாங்கவேண்டும், உங்கள் பணியை ரசித்து அனுபவிக்கவேண்டும் என்றால், அதற்கு ஓர் எளிய வழி, எங்களுடைய ‘தமிழிலிருந்து ஆங்கில’ மொழிபெயர்ப்பு மற்றும் தனி மெய்ப்பு திருத்தல். உயர் தரமான மொழிபெயர்ப்புச் சேவைகள், மிகச்சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் கட்டுப்படியாகும் கட்டணங்களை வழங்க நாங்கள் உறுதிகொண்டுள்ளோம், எங்கள் பணி உங்களுக்கு மன நிறைவு அளிக்கும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.