தொழில்முறை இணைய மொழிபெயர்ப்புச் சேவைகள்

Tamil Translation Services

ProofreadingServices.com தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மற்றும் பல மொழி இணைகளாகவும் தொழில்முறை மொழிபெயர்ப்புச் சேவைகளை வழங்குகிறோம். உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்கள், வேலை தேடுபவர்கள், வணிகர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கான எங்கள் ஆங்கிலச் சரிபார்ப்பு மற்றும் எடிட்டிங் சேவைகளுக்கு நாங்கள் மிகவும் பிரபலமானவர்கள். எங்கள் மனித மொழிபெயர்ப்புச் சேவைகளை உயர்தரப் பணி, மிகச்சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் கட்டுப்படியாகும் கட்டணங்களுடன் நாங்கள் தொடர்ந்து வழங்குகிறோம்.

மொழிபெயர்ப்பு மேற்கோளுக்கு எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

நாங்கள் என்னென்ன மொழிபெயர்ப்புச் சேவைகளை வழங்குகிறோம்?

நீங்கள் ஆங்கிலம் பேசும் நாட்டில், ஆங்கில மொழி இதழை அல்லது வேறு எதையேனும் வெளியிட விரும்புகிறீர்களா? நாங்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பை வழங்குகிறோம், எங்கள் ஆங்கிலக் குழுவின் தனிச் சரிபார்த்தலுடன்.

உலகெங்கிலும் உள்ள ஆங்கிலம் பேசாத பில்லியன்கணக்கான மக்களுக்கு உங்கள் தகவல்களைத் தெரிவிக்க விரும்புகிறீர்களா? நாங்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழ், வங்காளம், கொரிய மற்றும் பல மொழிகளில் மொழிபெயர்ப்பை வழங்குகிறோம்.

எங்கள் நிபுணத்துவங்கள்....

  • கல்வி மொழிபெயர்ப்பு. எங்கள் குழு உங்கள் பத்திரிகைக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஆய்வறிக்கைகளை ஆங்கிலத்துக்கு அல்லது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும், அதன்மூலம் நீங்கள் இன்னும் விரிவாகப் பிரசுரிக்கலாம், உங்கள் பணியின் தாக்கத்தை விரிவுபடுத்தலாம்.
  • வணிக மொழிபெயர்ப்பு. உங்கள் நிறுவனத்தின் வலைத்தளம், வலைப்பதிவு இடுகைகள், சந்தைப்படுத்தல் பொருள்கள் மற்றும் பிற வணிக உள்ளடக்கங்களை மொழிபெயர்ப்பது, உங்கள் வணிகத்தை வளர்ப்பதற்கும் கூடுதல் பணம் சம்பாதிப்பதற்கும் முக்கியமாகும்.
  • இலக்கிய மொழிபெயர்ப்பு. நாவல், நினைவுக் குறிப்பு அல்லது திரைக்கதை என எதுவானாலும் நீங்கள் உங்கள் கையெழுத்துப் பிரதிக்காகக் கடுமையாக உழைத்துள்ளீர்கள். தொழில்முறை மனித மொழிபெயர்ப்புச் சேவைகள் உங்கள் வாசகர்களை வியத்தகு முறையில் பெருகச் செய்யலாம் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களை உங்கள் படைப்புகளை ரசிக்க வைக்கலாம்.

ProofreadingServices.com இல், எங்கள் மொழி வல்லுநர்கள் குழு சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆயிரக்கணக்கான ஆவணங்களை முழு மன நிறைவுடன் மொழிபெயர்த்துத் தந்துள்ளது. நாங்கள் பிற மொழிபெயர்ப்பு நிறுவனங்களைப் போலல்லாமல், மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை ஒரு சொந்த மொழிப் பேச்சாளரால் எழுதப்பட்டதாகத் தோன்றும் வகையில் தயாரிக்கிறோம், தமிழிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு சேவையுடன் ஆங்கிலச் சரிபார்ப்பையும் நாங்கள் வழங்குகிறோம்.

நாங்கள் யார்?

ProofreadingServices.com இல் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் உங்கள் குரலையும் பாணியையும் பாதுகாக்கும்வகையில் உங்கள் படைப்பைத் துல்லியமாக மொழிபெயர்க்கும் அறிவும் அனுபவமும் கொண்டவர்கள். எங்கள் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் கட்டடப் பொறியியல் முதல் மருத்துவம் வரை பல பாடங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதால், உங்கள் திட்டம் அந்தத் துறை சார்ந்த ஒரு குழு உறுப்பினருக்கு வழங்கப்படும். எனவே, நீங்கள் ஒரு சிறுகதை, மானிய முன்மொழிவு அல்லது வலைப்பதிவு இடுகை என எதை ஆங்கிலத்திலிருந்து அல்லது ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கவேண்டியிருந்தாலும் சரி, எங்கள் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் குழு உயர்தரமான மொழிபெயர்ப்பை உங்களுக்குச் செய்து தருவார்கள் என நீங்கள் மனப்பூர்வமாக நம்பலாம்.

ஏன் நீங்கள் எங்களுடைய தமிழ் மொழிபெயர்ப்புச் சேவையைத் தேர்வுசெய்யவேண்டும்?

ProofreadingServices.com இல் நாங்கள் உலகெங்கிலும் உள்ள எழுத்தாளர்கள், சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் ஆங்கிலச் சரிபார்ப்பு வாசகர்களை எளிதில் ஒருங்கிணைக்கிறோம். வணிகங்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காகக் கட்டுப்படியாகக் கூடிய விலையில் கிடைக்கும் எங்களுடைய துல்லியமான மொழிபெயர்ப்புச் சேவைகள், புதிய வாசகர்களை அடையவும் சர்வதேச சந்தைகளில் விரிவு பெறவும் உங்களுக்கு உதவும், அது எந்த மொழி அல்லது தலைப்பாக இருந்தாலும் சரி. எங்கள் தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களுடைய உயர் தரங்களைப்பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், மேலும் எங்கள் பணியில் உங்கள் மன நிறைவுக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.

மொழிபெயர்ப்பு மேற்கோளுக்கு எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.